Enable Javscript for better performance
கைதான மாணவர்கள் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 14 மாணவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 250-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 14 மாணவர்கள் உள்ளிட்ட 136 பேர் ஜாமீன் கோரி தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது, அவர்களை ஜாமீனில் விடுவித்தால் விசாரணை பாதிக்கும் என சிபிசிஐடி போலீஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வணங்காமுடி, அனைத்து ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களான 14 பேரும், தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, புதன்கிழமை மீண்டும் மனுதாக்கல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai