Enable Javscript for better performance
ஜனநாயக சக்திகள் அணி சேர வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் சாதிய வன்முறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அணி சேர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.

    காதல் திருமணங்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுவதைத் தடுக்க பெரியாரிசம், மார்க்ஸிசம், லெனினிசம், தமிழ்த் தேசியம் இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தருமபுரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:

    பிசிஆர் சட்டமும், வன்கொடுமைச் சட்டமும் இதுவரை தலித் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டதே இல்லை. காவல் துறையினர் தங்களது சுய லாபத்துக்காகவே இத்தகைய சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கவும், தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் இப்போது முயற்சிகள் நடைபெறுகின்றன. காதல் திருமணம் என்ற பெயரால் ஏதோ தலித் மக்கள்தான் அனைத்து சமூகத்தினரது பெண்களைப் பாழ்படுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சாதிய இயக்கங்களையும் ஒருங்கிணைக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார்.

    19 சதம் மட்டுமே உள்ள தலித் மக்களால் 81 சதம் உள்ள இதர சமூகத்தினரை எப்படி எதிர்க்க முடியும்.

    வீண் பழி சுமத்தி சாதிச் சங்கங்களை ஒருங்கிணைத்து, சாதியக் கூட்டணியை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடுவோரே இத்தகைய வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் தலையிட்டால் அது சாதிய பிரச்னையாகும். எனவே, ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சாதிய வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai