Enable Javscript for better performance
காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தருமபுரி, கிருஷ்ணகிரியில் காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 26 சதத்திலிருந்து 49 சதமாக உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். எல்ஐசி, ஜிஐசி பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்கக் கோரியும் நாடு முழுவதும் காப்பீட்டுத் துறை ஊழியர்கள், தங்கள் கிளை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயில் கூட்டத்தை நடத்தினர்.

    இதன் ஒரு பகுதியாக தருமபுரியில் எஸ்ஐசி கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கக் கிளைத் தலைவர் கார்மல் செராபின் ராஜாவும், பாலக்கோடு கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சந்திரமௌலியும் தலைமை வகித்தனர். சேலம் கோட்டக் கிளைச் செயலர் மாதேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அலுவலர்கள் சங்கம், முகவர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரியில்

    கிருஷ்ணகிரியில் அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலர் தாமஸ் சுதந்திர தாஸ் தலைமை வகித்தார்.

    வளர்ச்சி அதிகாரிகள் சார்பில் சிவக்குமார், முதன்மை அதிகாரிகள் சார்பில் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அன்னிய நேரடி உச்ச வரம்பு முதலீட்டை உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து குரல் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai