Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆய்வுக் கூட்டம்

    By dn  |   Published on : 24th November 2012 12:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான கா. பாலச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினார்.

    சுருக்கத் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களை கையாளுதல், அடையாள அட்டை வழங்குதல், முகவரி மாற்றம், வாக்குச் சாவடி மாற்றம் தொடர்பாகச் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

    இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி, கோட்டாட்சியர்கள் பி. சுப்பிரமணி, காமராசர், தேர்தல் வட்டாட்சியர் ஆர். கமலநாதன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai