Enable Javscript for better performance
சேதமடைந்த வீடுகளில் பொதுப்பணித் துறை குழுவினர் மதிப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    சேதமடைந்த வீடுகளில் பொதுப்பணித் துறை குழுவினர் மதிப்பீடு

    By dn  |   Published on : 25th November 2012 02:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிபி-சிஐடி போலீஸார் உத்தரவுப்படி சேதமடைந்த வீடுகளை பொதுப்பணித்துறை குழுவினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

    தருமபுரியை அடுத்துள்ள நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 268 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சேதம் அடைந்த வீடுகளை மதிப்பிட்டு வழங்குமாறு அதன் பட்டியலை பொதுப் பணித் துறையிடம் சிபிசிஐடி ஒப்படைத்துள்ளது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பொதுப் பணித் துறையினர் பொறியாளர்கள் குழு 3 பிரிவுகளாக பிரிந்து நத்தம் காலனியில் சனிக்கிழமை ஒவ்வொரு வீடாக "டேப்' மூலம் அளவீடு செய்து வருகின்றனர். எரிந்து வீடுகள், சேதமடைந்த வீடுகளின் மதிப்பீடு, எரிந்த கட்டடங்கள் எதற்கு பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் பட்டியலிட்டு வருகின்றனர்.

    நத்தம் காலனியில் மட்டும் 144 வீடுகள் உள்ளன. இதேபோல், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களிலும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இன்னும் 3 நாள்களில் அனைத்து வீடுகளையும் அளவெடுத்து முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை பொதுப் பணித் துறை நிர்வாகப் பொறியாளர் வசம் இந்தக் குழுவினர் ஒப்படைக்கவுள்ளனர். குழுவின் அளவீடுக்கு துணையாக சிபிசிஐடி போலீஸாரும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai