Enable Javscript for better performance
வன்முறை பாதித்த கிராமங்களுக்குள் நுழைய முயற்சி: 20 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வன்முறை பாதித்த கிராமங்களுக்குள் நுழைய முயற்சி: 20 பேர் கைது

    By dn  |   Published on : 25th November 2012 01:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வன்முறை பாதித்த கிராமங்களுக்குள் தடையை மீறி நுழைய முயன்றதாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய 3 கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தி ஆய்வு அறிக்கை தயாரிக்கவும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஞானம் தலைமையில் 20 பேர் நத்தம் காலனிக்கு சனிக்கிழமை வந்தனர். அப்போது இவர்களை தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் தடுத்து நிறுத்திய போலீஸார், கிராமத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பதாகத் தெரிவித்தனர்.

    இருப்பினும், கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் நடந்து சென்ற அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

    பின்னர் விசாரணைக்குப் பின்னர், ஒரு மணிநேரத்தில் விடுவிக்கப்பட்டனர். மேலும், கிராமங்களுக்குச் செல்லவும் அனுமதியளித்தனர். இதைத் தொடர்ந்து கிராமங்களில் மக்களைச் சந்தித்து, வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai