Enable Javscript for better performance
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

    By  தருமபுரி,  |   Published on : 27th November 2012 04:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, அதியமான்கோட்டையில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
     நல்லம்பள்ளி வட்டார வள மையத்துக்கு உள்பட்ட அதியமான்கோட்டை குறுவள மையத்தைச் சேர்ந்த 14 பள்ளிகளின் 83 மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
     இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமுக்கு அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் முனிராஜி தலைமை வகித்தார். அதியமான்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் காளியப்பன், ஆசிரியர் பயிற்றுநர் க.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     பாலக்கோட்டு வட்டார வள மையத்திற்கு உள்பட்ட புலிக்கரை, சோமனஅள்ளி, எறகுண்டஅள்ளி, பாலக்கோடு (தெற்கு), பாலக்கோடு (நகரம்), பாலக்கோடு அக்ரஹாரம், ஜெர்த்தலாப் ஆகிய குறு வள மையங்களில் இத்தகைய பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai