Enable Javscript for better performance
கைதானோர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டிச.4-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கைதானோர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டிச.4-க்கு ஒத்திவைப்பு

    By dn  |   Published on : 29th November 2012 12:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    தருமபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய 3 கிராமங்கள் தாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக 142 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 136 பேர், ஜாமீன் கோரி தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 20- ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர்.

    இவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, மீண்டும் அவர்களது வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மாணவர்கள் 15 பேருக்கு தனியாகவும், மற்றவர்களுக்கு தனியாகவும் மனு தாக்கல் செய்தனர்.

    இவர்களில் 17 வயது நிரம்பிய மாணவர் ஒருவருக்கு மட்டும் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. இதர அனைவரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    அப்போது, குறுக்கிட்ட சிபி-சிஐடி போலீஸôர், கைதானவர்களை விடுதலை செய்தால் வழக்கு விசாரணை பாதிக்கபபடும். ஏற்கெனவே தாக்குதலுக்குள்ளான கிராமங்களிலும் பதற்றம் ஏற்படும். எனவே, அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

    இதேபோல, பாதிக்கப்பட்ட தரப்பு மக்களும் கைதானவர்களை விடுதலை செய்யக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, கைதான 14 மாணவர்கள் உள்பட அனைவரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.வணங்காமுடி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai