Enable Javscript for better performance
மாணவர்களுக்கு நன்னெறிகளை போதிக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு நன்னெறிகளை போதிக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

    By dn  |   Published on : 29th November 2012 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிகளில் மாணவர்களுக்கு நன்னெறிகளைப் போதிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி அறிவுருத்தினார்.

    பள்ளிக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, நன்னெறி போதித்தல் மற்றும் பள்ளி வளாகத்தைப் பேணிக் காத்தல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி தலைமை வகித்துப் பேசியது:

    குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல், அவர்களுக்கு மேலான கல்வியை வழங்குதல், நல்லொழுக்கத்தை விளக்கும் வகையில் நன்னெறிகளைப் போதித்தல், விளையாட்டுக்கான நேரம் ஒதுக்கி விளையாட வைத்தல் ஆகியவற்றில் ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

    தினமும் காலையில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில் நல்ல செய்திகளையும், நெறிகளையும் எடுத்துரைக்க வேண்டும்.

    மாணவ, மாணவிகளிடையே ஒற்றுமையை வளர்க்கவும், சமுதாயத்தில் நல்லிணக்கம் பேணுவது குறித்து விளக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    நூறு சத மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து படித்தல், நல்ல மதிப்பெண்களுடன் நூறு சதத் தேர்ச்சி இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்.

    முன்னதாக, இது தொடர்பான அறிவுரைகளை உள்ளடக்கிய கடிதம், குறுந்தகட்டை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.

    இந்தக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் பி.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai