Enable Javscript for better performance
திமுக உறுப்பினர் அட்டை விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக தருமபுரி தெற்கு மாவட்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வெள்ளிக்கிழமை (நவ.30) முதல் வழங்கப்படுவதாக மாவட்டப் பொறுப்பாளர் வ.முல்லைவேந்தன் தெரிவித்தார்.

     இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

     திமுக உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை தலைமைக் கழகப் பிரதிநிதி திருவையாறு துரை சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் வழங்குகின்றனர்.

     நவம்பர் 30-ஆம் தேதி, காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர், கம்பைநல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் வார்டு வாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும்.

     டிசம்பர் 2-ஆம் தேதி அரூர், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 3-ஆம் தேதி தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களிலும், அதே நாளில் பிற்பகல் தருமபுரி நகராட்சிப் பகுதிகளிலும் உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

     திமுக கட்சிப் பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவாக உரிய இடம், நேரத்தை தெரிவித்து, முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai