தருமபுரி மாவட்டம், ஏரியூர் சந்தை மைதானத்தில் வாடகை வாகனம் நிறுத்த அனுமதி கோரி வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டுர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க்
கிடம் மனு அளித்தனர்.
ஏரியூர் அட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் சந்தை மைதானத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வாகனங்
களை நிறுத்தி இயக்கி வருகிறோம்.
இந்த நிலையில், அங்கு வாகனங்களை நிறுத்தியுள்ள இரு வாகன ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஏரியூர் போலீஸார், சந்தை மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுத்தனர். இதனால், வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றித் தவித்து வருகிறோம்.
எனவே, எங்களுக்கு மீண்டும் ஏரியூர் சந்தை மைதானத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.