Enable Javscript for better performance
தருமபுரியில் 35 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 35 மி.மீட்டர் மழை பெய்தது.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 90 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் வாட்டி எடுத்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு சுமார் 10 மணியளவில் பரவலாக மாவட்டம், முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது.

    குறிப்பாக தருமபுரி பகுதியில் 35 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. நள்ளிரவு 12 மணி வரை மழை தொடர்ந்து பெய்ததால் தருமபுரி நகரில் உள்ள சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.

    மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் பாலக்கோடு அருகே கிட்டேசம்பட்டியில் விவசாயி காளியப்பன் தனது வீட்டருகே பசு மாட்டை கட்டி வைத்திருந்தார். இந்த மழையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது.

    மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): தருமபுரி 35, அரூர் 32.30, பாப்பிரெட்டிப்பட்டி 2.10, பாலக்கோடு 6.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai