Enable Javscript for better performance
தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பு அணைகள்- Dinamani

சுடச்சுட

    

    தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூ.கட்சி வலியுறுத்தியுள்ளது.

    அந்தக் கட்சியின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வார கால வேன் பிரசாரம் ஒன்றியச் செயலாளர் ஏ.மாது தலைமையில் நடைபெற்றது.

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே என்னேகொல்புதூரில் புதிய தடுப்பணை அமைக்க வேண்டும்.

    இந்த தடுப்பணையில் இருந்து காரிமங்கலம், தும்பலஹள்ளி, கம்பைநல்லூர், கடத்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதியதாக பாசன கால்வாய்கள் அமைக்க வேண்டும். மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் விசாயம் சார்ந்த புதிய தொழில்சாலைகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த வேன் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டன.

    இதில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.நஞ்சப்பன் எம்எல்ஏ, மூத்த நிர்வாகிகள் செல்வக்குமார், காளியப்பன், குலோப்ஜான், மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai