Enable Javscript for better performance
நாடகக் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் திங்கள்கிழமை நாடகக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.

    இதில், நலிந்த நாடகக் கலைஞர்கள் மூன்று பேருக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.36 ஆயிரத்திற்கான காசோலை, மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 515 மதிப்பில் உபகரணங்கள், 10-ஆம் வகுப்புப் போதுத்தேர்வில் சிறப்பிடம் வகித்த தலித், பழங்குடியின மாணவர்கள் 10 பேருக்கு மேல்நிலைக் கல்வி பயில நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேலு, துணை ஆட்சியர்கள் சேதுமாதவன், குப்புசாமி, சாந்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai