Enable Javscript for better performance
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 01st July 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக நிதி நிறுவன முகவர்கள் அளித்த மனு விவரம்:

    தருமபுரியில் கிரீன் அக்ரி மெளண்டன் இந்தியா என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை செம்மஅள்ளியைச் சேர்ந்த பெருமாள், மாட்லாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ், வாசிக்கவுண்டனூர் ஆனந்தன், குண்டலப்பட்டியைச் சேர்ந்த பூதாள், பாளையம்புதூரைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் நடத்தி வந்தனர்.

    இந்த நிறுவனத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 900-க்கும் அதிகமானோர் முகவர்களாக பணியாற்றினோம்.

    நிறுவனம் அளித்த உறுதியின் பேரில், பொதுமக்களிடமிருந்து நாள், வாரம், மாதம் என சிறுசேமிப்பு ரூ. 10 முதல் 5000 வரை வசூலித்த வந்தோம். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிபடி முதிர்வு தேதியில் வட்டியுடன் பணத்தை செலுத்த மறுத்து வருகின்றனர். இதனால், முதலீட்டாளர்கள் பணத்தை பெற்றுத்தர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாயுள்ளோம்.

    எனவே, நிதி நிறுவன உரிமையாளர்களிடமிருந்து பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai