Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 434 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் குறைதீர் கூட்டத்தில் 434 மனுக்கள் அளிப்பு

    By தருமபுரி,  |   Published on : 01st July 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா, சாலை, குடிநீர், மின் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பொதுமக்கள், பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் 434 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.

    ஓய்வூதியம் வழங்கக் கோரி மனு: தருமபுரி தியாகிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு அதில், மத்திய அரசின் ஓய்வூதியம் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆனால், பல நாள்களாகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள சுந்திர போராட்ட தியாகிகளுக்கு விரைந்து மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் மனு அளிக்கப்பட்டது.

    காலாவதியான மருந்துகளை விநியோகித்தவர்கள் மீது நடவடிக்கைக் கோரி மனு: தருமபுரி அம்பேத்கர் காலனியை சேர்ந்த கே.உமாபிரகாஷ், தருமபுரியிலுள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் தங்களது சகோதரியின் குழந்தைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெறச் சென்ற போது மருத்துவமனையில் காலாவதியான மருந்துகளை அளித்தனர்.

    அந்த மருந்தை உள்கொண்டதில் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால், குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேறு மருத்துவமனைக்குச் சென்றோம். அப்போது ஏற்கெனவே சிகிச்சைக்குச் சென்ற மருத்துவமனையில் அளித்த மருந்துகள் 2014, பிப்ரவரி மாதத்துடன் காலாவதியானது தெரிய வந்தது.

    எனவே, காலாவதியான மருந்துகளை விநியோகித்துவரும் அந்த மருத்துவமனை மருந்தகம், மருந்தாளுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.

    நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, பாலக்கோடு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் அளித்த மனு விவரம்:

    பாலக்கோடு ஒன்றியத்துக்குள்பட்ட சாமனூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தின் பாசனத்துக்காக பயன்பட்டு வந்த நீர் வழிப்பாதை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகளின் நலன் கருதி இந்தக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள பொம்மனூர் இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஏ.நந்தகுமார் அளித்த மனு:

    அந்த பகுதியிலுள்ள ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலம் தனி நபரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai