Enable Javscript for better performance
மரத்தின் மீது வேன் மோதியதில் விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே மரத்தின் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (58). இவரது உறவினர் முருகேசன். இவர்கள் இருவரும் ஈரோட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சனிக்கிழமை வேனில் சென்றனர். வேனை ஊத்தங்கரையைச் சேர்ந்த ராஜகோபால் ஓட்டினார்.

    இவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வேன் மூலம் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் குப்பூரில் வேன் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், ராமசாமி பலத்த காயமடைந்தார். மற்ற இருவரும் லேசான காயடைந்தனர். இவர்கள் மூவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ராமசாமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

    விபத்து குறித்து, கிருஷ்ணாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai