Enable Javscript for better performance
முல்லைவேந்தன் உருவ பொம்மை எரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முல்லைவேந்தனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

    தருமபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளாராக இருந்தவர் வ.முல்லைவேந்தன். இவர் அண்மையில் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில், அவர் திமுக பொருளாளர் ஸ்டாலின், கட்சித் தலைமையை விமர்சித்ததாகக் கூறி பாப்பிரெட்டிப்பட்டியில், முன்னாள் எம்.பி. ஆர்.தாமரைச்செல்வன் தலைமையில் முல்லைவேந்தன் உருவ பொம்மை திங்கள்கிழமை எரிக்கப்பட்டது.

    இதில், திமுக நிர்வாகிகள் க.அழகிரி, வே.பாரதிதாசன், தீ.முனிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai