Enable Javscript for better performance
அரூர் அருகே தொழிலாளி அடித்துக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே தொழிலாளி ராமமூர்த்தி (42) அடித்துக் கொலை செய்யப்பட்டதாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிய வந்துள்ளது.

    அரூர் வட்டம், ஏ.கே.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாசு மகன் ராமமூர்த்தி (42). தொழிலாளி. இவரது மனைவி மண்ணு (35). ராமமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.

    இந்த நிலையில், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், மனமுடைந்த ராமமூர்த்தியின் மனைவி மண்ணு கோபித்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தமது தாய் வீட்டுக்குச் சென்றாராம். தொடர்ந்து, மாமியார் வீட்டுக்குச் சென்ற ராமமூர்த்தி மதுபோதையில் மனைவியிடம் தகாரறில் ஈடுபட்டாராம். அப்போது ராமமூர்த்திக்கும், மனைவி மண்ணு, உறவினர் மகேந்திரன் (40) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. ராமமூர்த்தியின் தலைப் பகுதியில் கட்டையால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவர் உயிரிழந்தார்.

    அவரது சடலம் ஏ.கே.தண்டா பகுதியில் விவசாயி ஒருவரின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த 2011, பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அன்றைய தேதியில் இந்தச் சம்பவத்தை சந்தேக மரணம் என கோட்டப்பட்டி போலீஸார் பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில், ராமமூர்த்தியின் பிரேத பரிசோதனை அறிக்கை, ரசாயன ஆய்வு (கெமிக்கல் ரிப்போர்ட்) ஆகியவற்றில் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து, காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான தனிப் படை போலீஸார் விசாரணை செய்தனர். அதில், மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி ராமூர்த்தியை அவரது மனைவி, உறவினர் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, இந்த வழக்கில் ராமமூர்த்தியின் மனைவி மண்ணு (35), மண்ணுவின் சகோதரர் குப்பன் மகன் மகேந்திரன் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai