Enable Javscript for better performance
கட்டப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாத மாணவிகள் விடுதி- Dinamani

சுடச்சுட

    

    கட்டப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாத மாணவிகள் விடுதி

    By தருமபுரி,  |   Published on : 03rd July 2014 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்கிப் பயில ஏதுவாக, ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மாணவிகள் விடுதி 6 மாதங்களாகியும் திறக்கப்படாததால், மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    திருப்பத்தூர் சாலையில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4,000-க்கும் அதிகமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வந்து கல்வி பயில்வதால் மாணவிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் குறைக்கும் வகையில் பள்ளி வளாகத்தினுள் அரசினர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதி கட்ட அந்தத் துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதன் பயனாக, சுமார் ரூ.60 லட்சத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில் மாணவிகள் விடுதி 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டும் இதுவரையில் திறப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் முனைப்பு காட்டாமல் உள்ளனர்.

    இதன்காரணமாக நீண்ட தொலைவுகளில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகி வருகின்றது.

    இதுகுறித்து பள்ளி தரப்பில் கூறியது: மாணவிகள் பயன்பெறும் நோக்கில் 6 மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டும் இதுவரையில் விடுதி திறப்பு விழா காண்பதற்கான எந்த முயற்சியும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை.

    மாணவிகளின் எதிர்காலம், அரசுப் பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையில் உடனடியாக விடுதியைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai