Enable Javscript for better performance
ஜூலை 10-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள பாடப் பிரிவுகளுக்கு வருகிற 10-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) க.பச்சமுத்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.ஸி, கணிதம், கணினி அறிவியல், ஆகிய பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    இந்த இடங்களுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது.

    இதில், பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. இந்த நிலையில், தலித் மாணவிகளுக்கான 8 இடம், பழங்குடியினருக்கு 2 இடம், மிகவும் பிற்பட்டோர் 5, பிற்பட்டோருக்கான 60 இடங்களும் காலியாக உள்ளன.

    இந்த இடங்களுக்கு மாணவிகள் சேர்க்கை செய்ய இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி கல்லூரி செயல்படும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    இதில், தலித், மிகவும் பிற்பட்டோருக்கான இடங்களில் சேர ஏற்கெனவே கல்லூரியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மற்ற இடங்களுக்கு விண்ணப்பிக்காதாவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai