தருமபுரியில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட 4 பேர் விடுவிப்பு
By தருமபுரி, | Published on : 03rd July 2014 05:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி அருகே ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் பிடித்துச் செல்லப்பட்ட 4 பேர் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
தருமபுரி அருகே வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவை காதல் திருமணம் செய்த இளவரசனின் நினைவு நாளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நோக்கில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சங்கர், சண்முகம், அருள், தலைவா ஆகிய 4 பேரை அண்மையில் போலீஸார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெரிய வந்ததையடுத்து 4 பேரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.