Enable Javscript for better performance
திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 03rd July 2014 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்திற்கு ஜூலை 4-ஆம் தேதி வருகை தரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ராமர், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு: தருமபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் நினைவு நாள் வருகிற ஜூலை 4-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்க அன்றைய தினம் காலை 10 மணியளவில் தருமபுரி வர உள்ளார்.

    எனவே, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    கைது செய்ய வாய்ப்பு: தருமபுரி மாவட்டத்தில் நத்தம்காலனி இளவரசனின் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கக்கூடும் எனக் கருதி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் யாரும் மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என தருமபுரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெள்ளிக்கிழமை தருமபுரிக்கு வர உள்ளதாக அந்தக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

    அவ்வாறு அவர் தருமபுரி மாவட்டத்திற்கு வர முற்பட்டால் அவரை காவல் துறையினர் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai