Enable Javscript for better performance
தொழில் முனைவோர் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தொழில் முனைவோர் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி,  |   Published on : 03rd July 2014 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி, பட்டய தொழில் கல்வி படித்த தொழில் முனைவோருக்கு தமிழக அரசால் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் 2014-15-ஆம் நிதியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.1.90 கோடி மானியத்துடன் வங்கிகள், தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில், உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.ஒரு கோடி வரை கடன் பெறலாம். இதில், தொழில் முனைவோர் பொதுப் பிரிவினர் தங்களது பங்களிப்பாக 10 சதம், சிறப்புப் பிரிவினர் 5 சதம் செலுத்த வேண்டும். திட்ட மதிப்பில் 25 சதம் மானியம், முறையாகக் கடன் திருப்பிச் செலுத்துவோருக்கு 3 சத வட்டி மானியம் வழங்கப்படும்.

    பட்டம், பட்டயப் படிப்பு, தொழில் கல்வி முடித்தவர்கள் அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இந்தத் திட்டத்தில் கடனுதவி பெறலாம்.

    மேலும், தமிழகத்தில் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினர் 21 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களாவும், சிறப்புப் பிரிவினர் 45 வயதுக்குள்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

    எனவே, தகுதியுள்ள தொழில் முனைவோர் மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்று விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோரிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழுவினரால் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai