Enable Javscript for better performance
ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதி பெறாமல் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதைக் கண்காணிக்கத் தவறிய ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    அரூர் வட்டம், கோட்டப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மங்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த த.முருகன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் அவரது சொந்த நிலத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது தெரிய வந்தது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிய இந்தச் செயலைக் கண்காணிக்கத் தவறிய கோட்டப்பட்டி ஊராட்சி செயலர் பி.ஜெய்சங்கர் நியமன அலுவலரால் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai