Enable Javscript for better performance
\\\"காய்கறி ஏற்றி வந்த வாகனம் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடவில்லை\\\'- Dinamani

சுடச்சுட

    

    "காய்கறி ஏற்றி வந்த வாகனம் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடவில்லை'

    By தருமபுரி,  |   Published on : 04th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே காய்கறி சுமையை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் 108 சேவையில் ஈடுபடுத்தப்படாத புதிய வாகனம் என, இந்தச் சேவையை அளிக்கும் தனியார் நிறுவன மேலாளர் பி.பிரபுதாஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் காய்கறிகளை ஏற்றி வந்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த வாகனம் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்படாத புதிய வாகனமாகும்.

    தற்போது தமிழகத்தில் 643 வாகனங்கள் 108 சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், மேலும் 60 புதிய வாகனங்கள் இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்தப் புதிய வாகனங்கள் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த வாகனங்களை அந்த நிறுவனம் தாற்காலிக ஓட்டுநர்கள் மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. அவ்வாறு அனுப்பும் வாகனங்களை தரக் கட்டுப்பாடு ஆய்வுக்குப் பிறகே, அவசரகால மருந்துப் பொருள்கள் வைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

    இந்த நிலையில், ஒசூரில் காய்கறி ஏற்றி வந்த வாகனம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட போது அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் காய்கறிகளை ஏற்றி வந்தது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai