Enable Javscript for better performance
தருமபுரியில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் அரசுப் பேருந்து மீது வியாழக்கிழமை நள்ளிரவில் மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

    ஒசூரில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிவந்தார். அதில், 25 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில், பேருந்து நள்ளிரவு 12.20 மணி அளவில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே வந்த போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கல்களை வீசித் தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதில், பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. ஆனால், பயணிகளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள் வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai