Enable Javscript for better performance
தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளராக பெ.சுப்பிரமணி  நியமிக்கப்பட்டுள்ளார்.

    தருமபுரி மாவட்ட திமுகவில் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டக் குழுக்கள் செயல்பட்டு வந்தன.

    இதில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக பி.என்.பி.இன்பசேகரனும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தனும் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியின் காரணமாக, திமுக தலைமை தருமபுரியில் இரண்டு மாவட்டப் பொறுப்பாளர்களையும் நீக்கம் செய்தது. இதையடுத்து, இரண்டு மாவட்டக் குழுக்களையும் கலைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக அறிவித்தது.

    இந்த நிலையில், தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளராக நல்லம்பள்ளி அருகேயுள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்த பெ.சுப்பிரமணி என்பவரை அந்தக் கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்தது. 52 வயதாகும் இவர், கட்சியில் நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர், ஒன்றியக் குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியது: தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், பாரபட்சமின்றி செயல்படுவேன்.

    மேலும், உள்கட்சியில் கோஷ்டிகளுக்கு இடம் அளிக்காமல் ஒற்றுமையோடு செயல்படுவேன். அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் திறம்பட செயலாற்றுவேன். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் பாடுபடுவேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai