Enable Javscript for better performance
பாப்பம்பாடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    பாப்பம்பாடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

    By அரூர்,  |   Published on : 04th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பம்பாடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி காந்தி நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில். பழைமை வாய்ந்த இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அருள்மிகு ஸ்ரீ வலம்புரி கணபதி, ஸ்ரீ மாரியம்மன், பிரிவார தெய்வங்களுக்கு ஜீரணோதார அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகமும், கோபுரகலச தீர்த்த அபிஷேகமும் புதன்கிழமை காலை 5 மணிக்கு கணபதி வழிபாடும், 1108 கணபதி சகஸ்ரநாமமும் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மன் கரிக்கோலம் திருவீதி உலாவுடன் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து, வியாழக்கிழமை சுபஹோரையில் 2-ஆம் கால யாக பூஜைகள், தன்வந்திரி ஹோமங்கள், கோபுரகலச தீர்த்த அபிஷேகம், சிறப்பு அபிஷேகம், பசுமாடு தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் கோயில் நிர்வாகிகள் ஆர்.விவேகானந்தன், எம்.பழனிவேல் (எ) ராஜு, டி.சுப்பிரமணி, எஸ்.பழனியப்பன், ஆர்.துரை, செட்டியாரை கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai