Enable Javscript for better performance
விளையாட்டு விடுதிகளில் சேர நாளை 2ஆம் கட்ட தேர்வுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டு விடுதிகளில் சேர நாளை 2ஆம் கட்ட தேர்வுப் போட்டி

    By தருமபுரி  |   Published on : 04th July 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளையாட்டு விடுதிகளில் மாணவிகள் சேருவதற்கு மாநில அளவிலான இரண்டாம் கட்ட தேர்வுப் போட்டிகள் சனிக்கிழமை (ஜூலை 5) நடைபெறவுள்ளன.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் ந.நஞ்சப்பன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற உள்ள விளையாட்டு விடுதி தேர்வுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் கால்பந்து, கூடைப்பந்து பிரிவுக்கும், நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் பளு தூக்குதல் பிரிவுக்கு 7,8,9, பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு நடைபெறுகிறது. அதேபோல, 9ஆம் வகுப்பு மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் ஹாக்கி பிரிவுக்கும், 8,9, பிளஸ் 1 வகுப்பு மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் வாள் சண்டைப் பிரிவுக்கும் தேர்வுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

    மாநிலத் தேர்வுப் போட்டிகளுக்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை தருமபுரி மாவட்டத்தில் உள்ள வீராங்கனைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai