Enable Javscript for better performance
வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி

    By தருமபுரி,  |   Published on : 04th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலக்கோடு வட்டம், வாழைத்தோட்டம் கிராமத்தில் நவீன வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்து கிராம அளவிலான விவசாயிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றன.

    பயிற்சி முகாமிற்கு தலைமை வகித்த உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் பேசியது: விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நீர், நில வளத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்துச் செயல்பட வேண்டும். இன்றைய சூழலில் கிடைக்கிற மழைநீரை வீணாக்காமல் தங்களது நிலங்களில் சேமிக்க சரிவுக்கு குறுக்கே ஐந்து கலப்பை மூலம் உழவு செய்யலாம்.

    பயிர் செய்யாத காலங்களில் சரிவுக்கு குறுக்கே ஆழமாக உழவு செய்வதன் மூலம் பெய்யக் கூடிய மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் அந்தந்த நிலத்தில் உள்நோக்கி பாய்ந்து வறட்சிக் காலங்களில் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை அதிகரிக்கிறது என்றார் அவர்.

    உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி மானாவாரி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும், லாபகரமான முறையில் கறவை மாடுகள் வளர்ப்பு குறித்து குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி, பயிற்சி மைய உதவிப் பேராசிரியர் முனைவர் சந்தோஸ்குமார் எடுத்துரைத்தனர்.

    அதேபோல, வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறித்து பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் எடுத்துக் கூறினார்.

    வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், உமாமகேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் சண்முகதேவன், உதவி வேளாண்மை அலுவலர் கோவிந்தன் ஆகியோர் வேளாண் துறை திட்டங்கள், மண் மாதிரி எடுத்தல், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாக முறைகள், பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும் விதம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    ஏற்பாடுகளை உழவர் விவாதக் குழு அமைப்பாளர் தோட்டராமன், உழவர் நண்பர் சின்னசாமி, வேளாண்மை விரிவாக்கத் துணை இயக்கப் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai