Enable Javscript for better performance
அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு: இரு ஓட்டுநர்கள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு: இரு ஓட்டுநர்கள் காயம்

    By தருமபுரி,  |   Published on : 05th July 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டதில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.

    தருமபுரியில் இருந்து பெங்களூருவுக்கு வியாழக்கிழமை இரவு சென்ற அரசுப் பேருந்து மீது ராமாக்காள் ஏரி அருகேயும், தருமபுரியில் இருந்து சென்னைக்குச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்து மீது தாதுராமன்கொட்டாய் பகுதிலும் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில், அந்தப் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன.

    இதில் காயமடைந்த இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் சக்திவேல் (38), வரதராஜன் (39) இருவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai