Enable Javscript for better performance
சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன் மகன் மாரியப்பன் (35). தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சின்னாகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் திருவேங்கடமும் (47) சொந்த வேலையாக அனுமன்தீர்த்தத்தில் இருந்து ஊத்தங்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது திப்பம்பட்டி வளைவு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவேங்கடம் பலத்த காயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை போலீஸார், மாரியப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai