Enable Javscript for better performance
சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக 10 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக 10 பேர் மீது வழக்கு

    By ஊத்தங்கரை,  |   Published on : 05th July 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்தங்கரை அருகே சிறுமியைக் கடத்திச் சென்று கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்ததாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஊத்தங்கரையை அடுத்த குருகப்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவரை அவரது தாய் உதவியுடன் பப்ளிகானூரைச் சேர்ந்த வாசுதேவனின் மகன் ராமச்சந்திரன் கடத்திச் சென்று கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டாராம்.

    ஊத்தங்கரை அருகே உள்ள மாதம்பதி முருகன் கோயிலில் இந்த இளம்வயது திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்ற அந்தச் சிறுமி, படவனூரில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றார். அவரை அவரது சகோதரர் அழைத்துச் சென்று கல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து அந்தச் சிறுமியின் கணவர் ராமச்சந்திரன், தாய், மாமனார் வாசுதேவன், வள்ளி, சக்திவேல், அசோக்குமார், சுப்பிரமணி, சாலம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai