Enable Javscript for better performance
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமஞ்சனப் பெரு விழா- Dinamani

சுடச்சுட

    

    சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமஞ்சனப் பெரு விழா

    By தருமபுரி,  |   Published on : 05th July 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

    குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்திக்கு ஆனித் திருமஞ்சனப் பெருவிழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.

    இதில் முதல் நாள் காலை 7.30 மணிக்கு திருவாசக முற்றோதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்றது.

    இரண்டாம் நாள் வியாழக்கிழமை அதிகாலை சுவாமிக்கு மா, ஆரஞ்சு, ஆப்பிள், பன்னீர், திராட்சை, திருநீறு, நெய், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து, விழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு அம்மையப்பனின் திருநடனத் திரு வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai