Enable Javscript for better performance
தடையை மீறி நத்தம்காலனிக்குள் நுழைய முயன்ற மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தடையை மீறி நத்தம்காலனிக்குள் நுழைய முயன்ற மூவர் கைது

    By தருமபுரி,  |   Published on : 05th July 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளவரசனின் நினைவு தினத்தையொட்டி, தருமபுரி அருகேயுள்ள நத்தம்காலனிக்குள் தடையை மீறி வெள்ளிக்கிழமை நுழைய முயன்றதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில முதன்மைச் செயலாளரும், வழக்குரைஞருமான ரஜினிகாந்த், மாவட்டச் செயலாளர் சிவானந்தம், நிர்வாகி செல்வம் ஆகியோர் நத்தம் காலனிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் காரில் செல்ல முயன்றனர்.

    பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.சம்பத் உள்ளே செல்ல அனுமதியில்லை எனக் கூறியதால், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் ரஜினிகாந்த், சிவானந்தம், செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    ஜனநாயகத்துக்கு எதிரானது: அனுமதி மறுக்கப்பட்டது குறித்து வழக்குரைஞர் ரஜினிகாந்த் கூறியது:

    இளவரசனின் நினைவிடத்துக்குச் செல்ல போலீஸார் அனுமதி மறுத்து கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

    இளவரசனின் நண்பர்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி, எங்களை போலீஸார் உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.

    மேலும் மூவர் கைது: இதனிடையில், இளவரசனின் நினைவு தினத்தில் பங்கேற்பதற்காக கட்சிக் கொடியுடன் வந்த தலித் விடுதலை கட்சியைச் சேர்ந்த கண்ணதாசன் உள்பட 3 பேரை தொப்பூர் பகுதியில் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai