Enable Javscript for better performance
நத்தம்காலனிக்குள் நுழைய முயன்ற மேலும் 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நத்தம்காலனிக்குள் நுழைய முயன்ற மேலும் 4 பேர் கைது

    By தருமபுரி,  |   Published on : 05th July 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனிக்குள் தடையை மீறி நுழைய முயன்ற மேலும் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    நத்தம்காலனியைச் சேர்ந்த இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதாக தலித் அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை அறிவித்தன.

    இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தருமபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு அமலில் உள்ளது.

    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தடை உத்தரவை மீறி மக்கள் ஜனநாயக இளைஞர் கழத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கீரியம்பட்டி பச்சியப்பன், நடுப்பட்டி சுந்தரராஜன், பென்னாகரம் முருகன், செல்வம் ஆகியோர் நத்தம்கானிக்குள் நுழைய முயன்றனர்.

    இவர்களை கிருஷ்ணாபுரம் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல, ஏற்கெனவே தடை மீறி நுழைய முயன்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai