Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவுக்கு ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தார்.

    விழாவில், மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர் 4, மூன்று சக்கர சைக்கிள் 36, ஊன்றுகோல் 52, கருப்புக் கண்ணாடி குச்சி 29, காதொலிக் கருவி 44, சோலார் பேட்டரி 38 வழங்கப்பட்டன.

    முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மணிமாறன் வரவேற்றார்.

    இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணி, கெங்கபிராம்பட்டி கூட்டுறவுச் சங்கத் தலைவர் நாராயணசாமி, மாநில நில வள வங்கி தலைவர் சாகுல்அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட அண்ணா தொழில் சங்கத் தலைவர் நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், மாவட்ட புதுவாழ்வுத் திட்ட அலுவலர் குமரன், பேரூராட்சி உறுப்பினர் ஆறுமுகம், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துணை அலுவலர் முருகேசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai