Enable Javscript for better performance
முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி,  |   Published on : 05th July 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி ஊக்கத் தொகை பெற வருகிற

    31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் கி.சத்தியமூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    2013-14-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வித் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

    மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூ. 10,000 ரொக்கமும், மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூ. 5,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

    எனவே, 1,175 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai