Enable Javscript for better performance
மொரப்பூரில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மொரப்பூரில் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் ஊழியரை மிரட்டி ரூ. 1.80 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அரூர் வட்டம், மொரப்பூர்-கல்லாவி சாலையில் உள்ளது டாஸ்மாக் மதுக் கடை (கடை எண்: 2896).

    இந்தக் கடையில் எலவடை கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் கேசவன் (34) விற்பனையாளராக உள்ளார்.

    இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பணி முடிந்து மது விற்பனைத் தொகையான ரூ. 1.80 லட்சத்தை எடுத்து கொண்டு, டாஸ்மாக் ஊழியர் வேணுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கல்லாவி மாந்தோப்பு பகுதியில் உள்ள வேணுவின் வீட்டில் அவரை விட்டு விட்டு, அவரிடம் ரூ. 1.80 லட்சத்தை பாதுகாப்பாக வைக்குமாறு தந்தாராம். அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.

    இது குறித்து மொரப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai