Enable Javscript for better performance
ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

    By அரூர்  |   Published on : 05th July 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் அருகே உள்ள ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

    அரூர்- சேலம் நெடுஞ்சாலையில், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியமும், பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகமும் இணைந்து நடத்தின.

    இந்த முகாமை தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் இயக்குநர் ஏ.அய்யாகண்ணு குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தார்.

    முகாமில் டிவிஎஸ், ஹோண்டாய், பிரேக்ஸ் இந்தியா, அடிசன் அண்டு கோ உள்பட 55 தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதி வாய்ந்த இளைஞர்களை தேர்வு செய்தன.

    பாலிடெக்னிக், 12-ஆம் வகுப்பில் தொழில் கல்வி, ஐடிஐ உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளை படித்த ஏராளமான இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் வி.பழனிசாமி, செயலர் கே.சுந்தரராஜன், துணைத் தலைவர் ஏ.லோகநாதன், இணைச் செயலர் பி.ராஜகோபால், இயக்குநர்கள் எஸ்.லோகசந்திரன், கே.கருணாநிதி, சி.என்.கே.ஏ. பெரியசாமி, கே.ஜெயந்தி, பாவேந்தர் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் கே.பழனியப்பன், கல்லூரி முதல்வர்கள் விஜயகுமார், எஸ்.பழனிசாமி (பொறுப்பு), வேலைவாய்ப்பு முகாம் அலுவலர் எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai