Enable Javscript for better performance
அரூரில் மின்னணுப் பொருள் விற்பனைக் கடையில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் மின்னணுப் பொருள் விற்பனைக் கடையில் திருட்டு

    By அரூர்,  |   Published on : 06th July 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூரில் தனியார் மின்னணுப் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடு போனது சனிக்

    கிழமை தெரிய வந்தது.

    அரூர் இந்தியன் வங்கி அருகேயுள்ளது மின்னணுப் பொருள்கள் விற்பனைக் கடை. இந்தக் கடையில் ரேடியோ, குளிர்சாதனப் பெட்டி, டி.வி, மின்விசிறி உள்பட சுமார் ரூ. ஒரு கோடி மதிப்பிலான மின்னணுப் பொருள்கள் இருந்தன.

    கடையை வழக்கம்போல அதன் உரிமையாளர் வெள்ளிக்கிழமை இரவு பூட்டிச் சென்றார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 10 மணியளவில் கடைக்கு வந்து திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைந்த நிலையில் இருந்தது.

    மேலும், கடையின் டிராவில் இருந்த பணம், திருப்பதி கோயில் உண்டியல் உள்ளிட்டவைகள் உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதில், சுமார் ரூ.47 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. அதாவது, கடையின் மேற்கூரை தகர சீட்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது. விடியல்காலை 4 மணியளவில் உள்ளே நுழைந்த மர்மநபர் சுமார் ஒரு மணிநேரம் கடையின் உள்பகுதியில் உலா வந்தார்.

    அவரது அனைத்து நடவடிக்கைகளும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. பெரிய அளவிலான நகைக் கடைகளில் கொள்ளையடிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். திருடு போன கடையின் உள்பகுதியில் விரல்ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கடையில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் குப்புசாமி மகன் சம்பத் (54) அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் பி.என்.ராஜன் தலைமையிலான தனிப் படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai