Enable Javscript for better performance
இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பாலக்கோடு அருகே நடைபெறவிருந்த இளம் வயது திருமணத்தை வருவாய்த் துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே குஜ்ஜார அள்ளியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், மல்லாபுரத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சின்னகுட்டி மகன் பிரசாந்துக்கும் (22) ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.

    இதுகுறித்து அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் குமரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கோடு வட்டாட்சியர் வி.லதா தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai