Enable Javscript for better performance
கைதானவர்களிடம் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    கைதானவர்களிடம் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி

    By தருமபுரி,  |   Published on : 06th July 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், நத்தம்காலனியில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 3 பேரை வருகிற 9ஆம் தேதி வரை போலீஸார் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    நத்தம்காலனியில் கடந்த ஜூன் 28ஆம் தேதி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக சக்தி, துரை, சந்தோஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் சக்தி, துரை, சந்தோஷ் ஆகியோரிடம் வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரணை நடத்தக் கோரி, கிருஷ்ணாபுரம் போலீஸார் தருமபுரி இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ரத்தினவேல் பாண்டியன், மூவரிடம் வருகிற 9ஆம் தேதி வரை விசாரணை நடத்தி அன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai