Enable Javscript for better performance
தருமபுரியில் இரண்டு நீதிமன்றங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் இரண்டு புதிய நீதிமன்றங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

    தருமபுரி-பென்னாகரம் சாலையில் சோகத்தூர் அருகே மகளிர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் மாவட்ட நிலையிலான நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் நிலையிலான நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சு.வில்லியம் திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சியில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தற்போது திறக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களுடன் சேர்த்து 20 நீதிமன்றங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai