Enable Javscript for better performance
போலீஸாரால் தேடப்பட்ட இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், நத்தம்காலனியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் தொடர்புடையதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    நத்தம்காலனியில் கடந்த ஜூன் 28ஆம் தேதி போலீஸார் அதிரடி சோதனை நடத்தியதில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கொண்டம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் டேனியல் ராஜ் (30) கிருஷ்ணாபுரம் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    ஆன்மிக கருத்தரங்கு

    தருமபுரி, தருமபுரி சித்தேஸ்வரா நகரில் உள்ள ஆனந்த மார்க்க நர்சரி, பிரைமரி பள்ளியில் சமுதாய, ஆன்மிகம் தொடர்பான கருத்தரங்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) வரை நடைபெறுகிறது.

    கருத்தரங்கின் இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆச்சார்ய சம்பூர்னந் அவதூர்தா சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில், ஆனந்த மார்க்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai