Enable Javscript for better performance
மனைவியைத் தாக்கிய கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியைக் கட்டையால் தாக்கிய கணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன் (27). தொழிலாளியான இவருக்கும், மீனாவுக்கும் (25) 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

    இந்தநிலையில், தருமபுரி பிடமனேரியில் உள்ள சகோதரர் வீட்டில் தங்கியிருந்த மீனாவைக் குடும்பம் நடத்த வருமாறு நஞ்சுண்டன் சனிக்கிழமை அழைத்தாராம். அப்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. நஞ்சண்டன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த மீனா, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து நகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நஞ்சுண்டனைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai