Enable Javscript for better performance
விலையில்லா மின் பொருள்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரூரை அடுத்த வீரப்பநாய்க்கன்பட்டியில் 801 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

    அரூர் ஒன்றியம், வீரப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சித் தலைவர் முத்து ரத்தினம் தலைமை வகித்தார்.

    வீரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பாளையம், பாப்பனாவலசை உள்ளிட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த 801 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.

    விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் வளர்மதி முருகேசன், வட்டாட்சியர் பொன்.தமிழ்ச்செல்வி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கி.மாறன், அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.ஆர்.முருகன், அரசு வழக்குரைஞர் எம்.இளங்கோ, கிராம நிர்வாக அலுவலர் சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai