Enable Javscript for better performance
கடைகளில் பயன்படுத்திய 6 சிலிண்டர்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கடைகளில் பயன்படுத்திய 6 சிலிண்டர்கள் பறிமுதல்

    By தருமபுரி  |   Published on : 07th July 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடைகளில் பயன்படுத்திய 6 வீட்டு உபயோக சிலிண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

    பாலக்கோடு அருகே தேநீர் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் பயன்படுத்தவதாக வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில், வட்ட வழங்கல் அலுவலர் பி.கேசவமூர்த்தி, பறக்கும் படை துணை வட்டாட்சியர் ஆர்.சரவணன் ஆகியோர் மாரண்டஹள்ளி, மல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    இதில், தேநீர் கடைகள், உணவகங்களில் வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் 6 சிலிண்டர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai