Enable Javscript for better performance
தருமபுரியில் மக்கள் பிரதநிதிகளாக உள்ள மேலும் சிலர் ராஜிநாமா- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் மக்கள் பிரதநிதிகளாக உள்ள மேலும் சிலர் ராஜிநாமா

    By தருமபுரி  |   Published on : 07th July 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியில் உள்ள மேலும் சிலர் ராஜிநாமா செய்யக்கூடும் என அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அண்மையில் நடைபெற்ற மக்களை தேர்தலில் தருமபுரி தொகுதியில் அதிமுக சார்பில் வழக்குரைஞர் பி.எஸ்.மோகன் போட்டியிட்டார்.

    மக்களை தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றிப்பெற்றது. இருப்பினும், தருமபுரி மக்களை தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியிடம் அதிமுக வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

    இந்த தோல்விக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மற்றும் மக்கள் பிரதநிதிகளாக உள்ள சிலரின் செயல்பாடுகளே காரணம் என அதிமுக தலைமைக்கு புகார்கள் சென்றன.

    இதையடுத்து, தருமபுரி மாவட்டச் செயலாளராக பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன் கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அதிமுக தலைமை நீக்கியது.

    இதையடுத்து, சனிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்த டி.ஆர்.அன்பழகன் தனது மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி, பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பிரதநிதிகளாக உள்ள மேலும் சிலர் பதவி விலக அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளாதாகவும், அவர்கள் ஓரிரு தினங்களில் ராஜிநாமா செய்யக்கூடும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai